ஒரு துண்டை எடுத்ததற்கு இப்படியொரு சண்டையா..?கொதித்தெழுந்த ஜனனி!

வயது வித்தியாசம் பார்க்காமல் ஜனனி செய்த காரியம் பற்றி தான் பிக் பாஸ் பார்வையாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாத்ரூமில் நடந்த பிரச்சனையின்போது ஜனனி செய்த காரியம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
ரெட்மி டிவிகளில் இருந்து சிறந்த விற்பனையாளர்களை, உங்கள் குடும்பத்திற்கு ஒரு பொழுதுபோக்கின் தொகுப்பை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்! அதிக தள்ளுபடி விலையில் ஷாப்பிங் செய்து பலன்களைப் பெறுங்கள்.
சண்டை

வார இறுதி நாட்களில் உலக நாயகன் கமல் ஹாசன் வந்தால் பிக் பாஸ் போட்டியாளர்கள் ரொம்ப சமத்தாக மாறிவிடுவார்கள். அதனாலோ என்னவோ இன்றே இஷ்டத்துக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதல் ப்ரொமோ வீடிோவில் அசீமும், மகேஸ்வரியும் மோதினார்கள். இதையடுத்தும் சண்டை பற்றி தான் ப்ரொமோ வந்திருக்கிறது.

ஜனனி

பாத்ரூமில் ஒரு துண்டுக்காக ஜனனி மற்றும் குவின்ஸி இடையே பிரச்சனை ஏற்படுகிறது. கோபத்தில் ஒரு பொருளை தூக்கிப் போட்டு உடைத்துவிட்டார் ஜனனி. குவின்ஸியிடம் மன்னிப்பு கேட்டு கண் கலங்கினார் ஜனனி. திடீர் என்று குவின்ஸியின் காலை தொட்டு மன்னிப்பும் கேட்டார்.

துண்டு

ஒரு துண்டை எடுத்ததற்கு ஒரு சண்டை. அதற்கு ஒரு ப்ரொமோவா பிக் பாஸ். நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்க. ஜனனி சண்டையை பார்த்தால் ஏதோ சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தது போன்று இருக்கிறதே என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிராமா

போதும் ஜனனி நிறுத்திக்கோங்க. உங்க டிராமா ஓவராக போய்க் கொண்டிருக்கிறது என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!