ஹன்சிகாவின் வருங்கால கணவரின் முன்னாள் மனைவி இவரா..?

ஹன்சிகாவின் வருங்கால கணவரான சொஹைல் கதூரியாவின் முதல் திருமண புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.


ஹன்சிகாவுக்கும், அவரின் பிசினஸ் பார்ட்னரான சொஹைல் கதூரியாவுக்கும் டிசம்பர் மாதம் 4ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.

இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனையை வாடைக்கு எடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சொஹைல் கதூரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்தானது தெரிய வந்துள்ளது. ரிங்கி என்கிற பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார் சொஹைல்.

அந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. கோவாவில் நடந்த சொஹைல், ரிங்கியின் திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

சொஹைலின் முதல் திருமண புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

சொஹைலின் முன்னாள் மனைவி ரிங்கி ஹன்சிகாவின் தோழி போன்று தெரிகிறதே. இந்த சொஹைலை நம்பியா திருமணம் செய்யப் போகிறார் ஹன்சிகா?

அது சரி அவர் வாழ்க்கை, அவர் இஷம்டம். இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க ஹன்சுமா. எல்லோரையும் நம்பிவிட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார் சொஹைல். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தான் ஹன்சிகாவுக்கும், சொஹைலுக்கும் இடையே பழக்கம் என்று தகவல் வெளியாகியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!