விக்ரமன் உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குனா தக்காளி சட்னியா?

ஏன் விக்ரமன், உங்களுக்கு வந்தால் ரத்தம். அதே மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என பிக் பாஸ் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தார். அதை பார்த்து கோப்பட்டார் விக்ரமன். மேலும் பிக் பாஸ் பார்வையாளர்களும் கோபப்பட்டு மகேஸ்வரியை விளாசினார்கள்.

இந்நிலையில் தான் பிக் பாஸ் பார்வையாளர்கள் விக்ரமனுக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள்.

உங்களின் பல், டிராகுலா மாதிரி இருக்கிறது என்று ராமிடம் ஆயிஷா தெரிவித்தார். அதை பார்த்த விக்ரமனோ, பாடி ஷேமிங் பண்ணாதீங்க என்று கூறினார்.

அதே சமயம், ஆயிஷா மற்றும் நிவாஷினி சிகப்பாக இருப்பதாகவும், மைனா நந்தினி கருப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார் விக்ரமன். அதற்கு ஆயிஷாவும், மைனாவும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நான் சொன்னதில் என்ன தவறு என்று கேட்டார் விக்ரம்.

இதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் கூறியிருப்பதாவது,

உங்களை யாராவது உருவக்கேலி செய்தால் கோபம் வருகிறது. ஆனால் நீங்கள் அடுத்தவர்களை கிண்டல் செய்தால் நியாயம். உங்களுக்கு வந்தால் ரத்தம். அதே மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை வெளியான ப்ரொமோ வீடியோவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது விக்ரமன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!