லெஸ்பியன் ஜோடியாக மாறிய அழகிகள்.!

மிஸ் கிராண்ட் சர்வதேச 2020 அழகுப் போட்டியின் போது மிஸ் அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும்,மிஸ் போர்ட்டோ ரிகோ அழகி பேபியோலா வாலண்டினும் சந்தித்து கொண்டனர்.

அவர்கள் நண்பர்களாகி பின்னர் ஒருவரை ஒருவர் விரும்ப தொடங்கினர். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். லெஸ்பியன் ஜோடியாக மாறிய அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்தனர்.

அவர்கள் தங்கள் உறவை இதுவரை ரகசியமாக வைத்திருந்தனர். அவர்கள் தங்கள் திருமணத்தை தற்போது பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். இவர்களுக்கு அக்டோபர் 28ம் தேதி திருமணம் நடந்தது.

போர்டோ ரிகோவின் சான் ஜுவானில் உள்ள திருமணப் பதிவு அலுவலகத்திற்கு வெளியே அவர்கள் வெள்ளை நிற உடையணிந்து ஜோடியாக காணப்படுகின்றனர். மரியானா வரேலா மிஸ் யுனிவர்ஸ் 2019 இல் அர்ஜென்டினா சார்பில் கலந்து கொண்டார். பின்னர், மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 அழகி போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்தார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!