உங்க பெட்ரூமில் நடந்தால் சும்மா இருப்பீர்களா..? கோலி மனைவி ஆவேசம்!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், “கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான விஷயம். சில சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால் சும்மா இருப்பீர்களா” என குறிப்பிட்டுள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!