நாய்க்குட்டி போல சிங்கத்தை கொஞ்சி விளையாடிய பெண்- வீடியோ வைரல்!

சமூக ஊடகங்களில் ஆபத்தான செயல்களை கொண்ட துணிச்சலான வீடியோக்கள் அவ்வப்போது பரவி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

பார்வையாளர்களும் அந்த வீடியோக்களை பார்த்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுண்டு. அந்த வகையில் சிங்கத்தை கொஞ்சி மகிழும் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு பெண், நாய்க்குட்டியை போல ஒரு சிங்கத்துடன் கொஞ்சி விளையாடுகிறார். அந்த சிங்கம் பெண்ணின் அருகில் அவரை உரசியபடி வருகிறது. அவரது அருகில் நின்றபடி வாயை பெரிதாக பயங்கரமாக திறக்கிறது.

அந்த பெண் சிங்கத்தின் தலையில் தடவுகிறார். பின்னர் சிங்கம் அந்த பெண்ணை சுற்றி திரிகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. இந்த வீடியோ இணையதளத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ 1 கோடியே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளன. 6 லட்சத்து 2 ஆயிரத்து 537 லைக்குகளையும் குவித்துள்ளது. மேலும் வீடியோவை பார்த்த 1400 பேர் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!