அசீமை சிறையில் அடைத்த பிக் பாஸ் – அசிங்கப்படுத்திய மைனா!

ஓவராக பேசி வரும் அசீமை சிறையில் அடைத்த ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. சிறைக்கு செல்லும் முன்பு மைனா நந்தினியிடம் பில்ட் அப் கொடுத்து அசிங்கப்பட்டார் அசீம்.

அசீம் மற்றும் ஷிவின் கணேசன் ஆகியோரை சிறையில் அடைத்துவிட்டார் பிக் பாஸ்.

அசீம் மற்றும் ஷிவின் கணேசனை சிறையில் அடைத்துவிட்டார்கள். அது தொடர்பான ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அசீமை சிறையில் அல்ல வெளியே அனுப்ப வேண்டும் பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

மைனா நந்தினி

சிறைக்கு செல்லும் முன்பு, இதற்கெல்லாம் அஞ்சும் மனிதன் நான் அல்ல மைனா என்று வீர வசனம் பேசினார் அசீம். அதற்கு மைனா நந்தினியோ, ப்பே என்று ஒரு வார்த்தையில் பொசுக்குனு அசிங்கப்படுத்திவிட்டார். மைனா செய்த காரியம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஷிவின்

சிறை உடையை சந்தோஷமாக அணிந்து கொண்டு டான்ஸ் ஆடினார் ஷிவின். சிறையில் அடைத்தும் அசீமுக்கு பேச்சு மட்டும் குறையவே இல்லை. அசீமை பார்க்கப் பார்க்க கோபம் வருவதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரெட் கார்டு

பெண் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசும் அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்கிறார்கள் பார்வையாளர்கள். திருநங்கை ஷிவினை அசீம் கிண்டல் செய்ததை பார்த்த பார்வையாளர்கள் மேலும் கோபம் அடைந்தார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!