உதட்டைக்கடித்துக் கொண்டு நிவாஷினியிடம் ஆபாசமாக பேசிய அசல்!

பிக்பாஸ் நிகழ்சில் பங்கேற்றுள்ள அசல் நிவாஷினியிடம் ஆபாசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அசல் கோளாறு தினமும் ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார். கருவாட்டு பானையை சுற்றி வரும் பூனை போல் எப்போதும் பெண் போட்டியாளர்களை சுற்றி வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பெண்களுடன் செட் ஆகாது

பிக்பாஸ் தொடக்கவிழாவில் தன்னைப்பற்றிய அறிமுக வீடியோவில் பேசிய அசல் கோளாறு தனக்கும் பெண்களுக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாது என்றார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து பெண் போட்டியாளர்களிடம் மட்டும்தான் நெருக்கம் காட்டி வருகிறார்.

தொடாத பெண்களே இல்லை

பிக்பாஸ் வீட்டில் அவர் தொடாத பெண்களே இல்லை. அந்த அளவுக்கு எல்லோரிடமும் பேசுவது போல் சென்று நைசாக அவர்களை தொட்டு தடவி வருகிறார். பெண் போட்டியாளர்களுக்கு பின்னால் நின்று அவர்களை குறுகுறுவென பார்க்கும் அசல், அவர்களை தொட்டு தடவிய பிறகுதான் அங்கிருந்து நகர்கிறார்.

ஆசையெல்லாம் தீர்த்து

பெண்களை கட்டிப்பிடிப்பது, தடவுவது, கடிப்பது, அவர்களுடன் படுப்பது, மேலே காலைப்போடுவது என அவர்களின் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் தனது ஆசையெல்லாம் தீர்த்து வருகிறார் அசல் கோளாறு. அசல் கோளாறின் இந்த நடவடிக்கையால் கொதித்து போயுள்ளனர் நெட்டிசன்கள்.

புதிய வீடியோ

அவரை உடனே வெளியேற்ற வேண்டும் என விளாசி வருகின்றனர். இந்நிலையில் அசல் கோளார் லீலையின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நிவாஷினியை பின்னால் இருந்து குறுகுறுவென பார்க்கும் அசல், அவரது முதுகில் கையை வைக்கிறார்.

உதட்டைக் கடித்துக்கொண்டு

இதனால் அவரை திரும்பி பார்க்கும் நிவாஷினியிடம், உதட்டைக்கடித்துக் கொண்டு உன்னை பார்க்கும் போது அப்படியே ஒரு மாதிரி ஆகிறது என கூறி அவரை அணைத்தப்படி அழைத்து செல்கிறார். அசல் கோளாறின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த காம வெறி பிடித்தவனை முதலில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புங்கள் என கூறி வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!