கோவிலின் உண்டியலை திருடுவதற்கு முன் மனமுருக சாமி கும்பிட்ட திருடன்!

போபாலில் கோவிலின் உண்டியலை திருடுவதற்கு முன், சாமி கும்பிட்ட திருடன், சிசிடிவி வெளியானதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள கோவிலில் நள்ளிரவு நேரத்தில் ஒருவர் வெள்ளை நிற காரில் வருகிறார். காரை கோவிலில் இருந்து சற்று தொலைவில் நிறுத்தும் அந்த நபர் யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, கோவிலுக்குள் நுழைகிறான்.

அதன் பின்னர் அங்குக் கடவுளிடம் மனமுருக வேண்டிக் கொள்கிறார். அதன் பின்னர் அவர் யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த உண்டியலைத் திருடிச் செல்கிறார்.

இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவம் தீபாவளிக்கு முதல் நாள் நள்ளிரவு 2 மணி அளவில் நடந்தாக கூறப்படுகிறது. அங்குள்ள கவுர் சௌகியில் உள்ள ஹனுமான் கோவிலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

மறுநாள் அதிகாலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தை முதலில் பார்த்து உள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

நள்ளிரவு நேரத்தில் கோயிலில் புகுந்து திருடிய அந்த நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைகளில் வாட்ச் எல்லாம் அணிந்து டிப்டாப்பாகவே அந்த திருடன் இருந்து உள்ளான். குறிப்பாக அவன் தனது செருப்பைக் கூட கோவிலுக்கு வெளியே கழட்டி வைத்து விட்டான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு அங்கு உண்டியலில் இருந்து பணத்தைத் திருடன் திருடியுள்ள சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவை வைத்து அந்த பக்தி திருடனை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் இதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு கோவிலிலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவம் நடந்து இருந்தது.

அதன் வீடியோவும் கூட இணையத்தில் வெளியானது. அதில் சட்டை போடாமல் கோயிலுக்குள் நுழையும் திருடன் ஒருவன், திருடும் முன்பு உள்ளே சன்னதிக்குள் தெய்வத்தை வணங்குகிறார்.

அதன் பின்னரே அவன் அந்த கோவில் உண்டியலைத் திருடிச் சென்றான். இப்போது சில மாதங்கள் இடைவெளியில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!