ஜி.பி.முத்துவை புகழ்ந்த இயக்குனர் சீனுராமசாமி!

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், போட்டியாளர் ஜி.பி.முத்து வெளியேறியது குறித்து இயக்குனர் சீனுராமசாமி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் சீசன் ஆறிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்” என பதிவிட்டுள்ளார்.தற்போது பிக்பாஸ் வீட்டினுள் 19 நபர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!