30 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியை சிக்க வைத்த ஒரு சொட்டு ரத்தம்!

பல கொலை வழக்குகள் மர்மமானவையாக இருக்கும். போலீசாருக்கு சரியான ஆதரங்களோ துப்போ கிடைக்காததால் குற்றவாளி தப்பித்துவிடுகிறார். ஆனால் ஒரு மர்மமான கொலை வழக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கப்பட்டது.

மூன்று தசாப்தங்களுக்கு முன் கொலை செய்தவர் சமீபத்தில் பிடிபட்டார். ஒரு சொட்டு ரத்தம் தான் வழக்கை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு உலகின் மிக மர்மமான கொலை வழக்குகளில் ஒன்றாக இடம் பிடிக்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?

பல சுவாரஸ்யமான மற்றும் சஸ்பென்ஸ் குற்ற வழக்குகளை பற்றி கேட்டிருக்கலாம். அதிலும் திரைப்படங்களில், கொலையாளியை கண்டுபிடிக்க காவல்துறை படும் பாடுகளை பார்க்கலாம்.

சில ஆதாரங்கள், கொலைகாரனை கண்டறிய போலீசாருக்கு உதவுகின்றன. சில சமயங்களில் நீண்டகாலத்திற்கு பிறகே வழக்கு முடிவுக்கு வரும். அதற்குள் கொலைகாரன் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

ஒரு வித்தியாசமான கொலை வழக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் தீர்த்து வைக்கப்பட்டது சாதாரணமான விஷயமாக தெரிந்தாலும், இந்தக் கொலை விவகாரத்தை முடித்து வைத்தது ஒரு துளி ரத்தம் தான் என்பது ஆச்சரியமளிக்கிறது.


சி.என்.என்வெளியிட்டுள்ள செய்தி இந்தத் தகவலை உறுதிபடுத்துகிறது.

1989 இல் கொலை செய்யப்பட்ட தம்பதியினர்

வெர்மான்ட் மாநில காவல்துறையின் கூற்றுப்படி, ஜார்ஜ் பீகாக், 76 மற்றும் கேத்தரின் பீகாக் தம்பதிகள், 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டான்பியில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். தம்பதிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.


சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் துப்பு துலக்க முயன்றபோது, ​​வீட்டிற்குள் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து ஆதாரங்களை தேடினர், ஆனால் குற்றவாளியை அடையக்கூடிய எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கொலைக்கான ஆதரம் கிடைத்து, குற்றவாளி சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்த கொலை வழக்கில் 79 வயதான அந்தோனி லூயிஸ் வியாழக்கிழமை காவல்துறையால் கைது செய்யப்பட்டு நியூயார்க்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தத் தம்பதியரின் மகளை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை லூயிஸ் மீது சந்தேகம் எழுந்தது. ஆனால், லூயிஸுக்கு எதிராக போலீசாருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நாள்டையில் விசாரணை அப்படியே கைவிடப்பட்டது. அண்மையில் பணி மாறுதலில் வந்த ஒரு புதிய அதிகாரி இந்த வழக்கில் ஆர்வம் காட்டினார்.

மே 2020 இல், தடயவியல் குழு ஒரு அறிக்கையிலிருந்து அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது. அக்டோபர் 1989 இல், லூயிஸின் காருக்குள் கண்டெடுக்கப்பட்ட 1 துளி இரத்தம் ஜார்ஜ் பீகாக்குடையது என்று குழு கூறியது. இந்த ரத்தத்தின் டிஎன்ஏம் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பீகாக்குடன் ஒத்துப் போனது.

உண்மையில், கொலை நடந்து 1 மாதத்திற்குப் பிறகு, ஜார்ஜின் காருக்குள் இருந்து 1 துளி இரத்தத்தை போலீசார் கண்டுபிடித்தனர், ஆனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அந்த ரத்துத்துளியை ஆய்வக சோதனைக்கும் அனுப்பவில்லை.

தற்போது, புதிய விசாரணை அதிகாரி, வழக்கை தூசி தட்டி கையில் எடுத்தவுடன், அவர் ரத்தத்துளியை சோதனைக்கு அனுப்பியதில், உண்மை தெரியவந்து, மாமியார் மற்றும் மாமானாரை கொன்ற மருமகன் தற்போது ’மாமியார்’ வீட்டில் களி தின்கிறார்.-News & image Credit: zeenews.india * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!