பிக்பாஸ் வீட்டில் முதல் கேப்டன் ஜி.பி.முத்துவா, ஜனனியா..?

ஜி.பி. முத்துவா இல்லை ஜனனியா என்பது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் நாமினேஷனை துவங்கி வைத்தார்கள். குவின்ஸியை நாமினேட் செய்தார் ஜி.பி. முத்து.

இந்நிலையில் இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கேப்டன்ஸி டாஸ்க்கை காட்டியுள்ளனர்.

கைப்பிடியுடன் கூடிய கடிகாரத்தில் சாந்தி, ஜனனி, ஜிபி முத்து ஆகியோர் நிற்கிறார்கள். வலி தாங்காமல் சாந்தி இறங்கிவிட்டார்.

ஒரு மணிநேரம் ஆனபோதிலும் ஜனனியும், ஜி.பி. முத்துவும் கீழே இறங்குவதாக இல்லை. இதில் ரஜினியின் முத்து படத்தில் வந்த பாடலை ஜி.பி. முத்துவை பார்த்து பாடுகிறார் ஜனனி.

ஜெயிக்கப் போவது ஜனனியா, முத்துவா என்பதை பார்க்க பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

டாஸ்க் என்று வந்துவிட்டால் ஜனனி கெத்து தான். ஜனனி ஹேட்டர்ஸுகளுக்ககாவே இந்த வீடியோ.


இந்த சீசனில் புதுசா யோசிக்கிறார் பிக் பாஸ். அதை பாராட்டியே ஆக வேண்டும்.

முதல் கேப்டன் எங்க அண்ணன் ஜி.பி. முத்து தான் என்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!