நடிகை ஜியாகான் வழக்கை தாமதப்படுத்த தாய் முயற்சி- ஐகோர்ட்டு குற்றச்சாட்டு

நடிகை ஜியாகானின் தற்கொலை வழக்கை தாமதப்படுத்த அவரது தாய் முயற்சி செய்வதாக ஐகோர்ட்டு கூறியுள்ளது. மனு தாக்கல் இந்தி கஜினி பட நடிகை ஜியாகான் (வயது 25).

இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூகு பகுதியில் தனது வீட்டில் மின் விசிறியில், துப்பட்டாவினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., ஜியா கானின் காதலனான நடிகர் சூரஜ் பஞ்சோலி தான் நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஜியா கானின் தாய் ரபியா கான் இது ஒரு கொலை என குற்றம் சாட்டி வருகிறார். இந்த வழக்கை எப்.பி.ஐ.க்கு மாற்றவேண்டும், வழக்கை முதலில் இருந்து புதிதாக விசாரிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோரிக்கை நிராகரிப்பு இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.கட்காரி மற்றும் எம்.என். ஜாதவ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜியாகானின் தாய் ரபியா கானின் கோரிக்கையை நிராகரித்தனர். புதிய விசாரணைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.

இது குறித்து நீதிபதிகள் தீர்ப்பில் விரிவாக கூறியதாவது:- தாமதப்படுத்த முயற்சி இந்த வழக்கில் ஜியாகானின் மரணம் கொலைதான் என்றும், அது தற்கொலை இல்லை என்றும் விசாரணையில் கண்டறியப்படவில்லை.

ஆனால் ரபியா கானின் அணுகுமுறை கோர்ட்டில் சரியான செயல்முறையை தவிர்த்துவிட்டு, இது கொலை என நிரூபிப்பதில் மட்டும் முனைப்பு காட்டுவதுபோல் தெரிகிறது. மனுதாரரின் இந்த நடத்தை கோர்ட்டின் விசாரணையை தேவையின்றி தள்ளிப்போடுவதற்கும், தாமதப்படுத்துவதற்கும் சமமாகும்.

விசாரணை முடிவதற்கு முன்பே ஜியாகானின் மரணம் தற்கொலை இல்லை. அது கொலை என்று தனக்கு சாதகமாக இந்த கோர்ட்டு தீர்ப்பு வழக்க வேண்டும் என்று மனுதாரர் விரும்புவதாக தெரிகிறது. முழுமையான, பாரபட்சமற்ற நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை சி.பி.ஐ. முழுமையான முறையில் மேற்கொள்கிறது என்பது முதற்கட்ட விசாரணை முடிவில் தெரிகிறது. இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறுவது முறையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!