இறந்தவரின் உடலை ஒன்றைரை ஆண்டுகாலம் வீட்டில் வைத்திருந்த குடும்பத்தினர்!

இறந்த வருமான வரித்துறை அதிகாரியின் உடலை அவர் கோமாவில் இருப்பதாக கூறி ஒன்றைரை ஆண்டுகாலம் அவரது குடும்பத்தினர் வீட்டில் வைத்திருந்தனர்.

உத்தரபிரதேசம் கான்பூர் ரோஷன்நகரைச் சேர்ந்த கிருஷ்ணாபுரம். இங்கு வசித்துவந்தவர் விம்லேஷ் சோன்கர் அகமதாபாத் வருமான வரித்துறையில் ஏஓவாக பணியாற்றி வந்தார்.ஏப்ரல் 2021 இல், விம்லேஷின் உடல்நிலை மோசமடைந்தது என்று கூறப்படுகிறது.

குடும்பத்தினர் விம்லேஷை மோதி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மரண சான்றிதழும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த பிறகு, இறந்தவரை உயிருடன் இருப்பதாக கூறி குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை ஒத்திவைத்தனர்.

இறந்தவரின் உடல் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிற்குளேயே படுக்கையில் கிடந்தது. விம்லேஷ் கோமா நிலைக்கு சென்றதாக உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் அந்த வீட்டினர் தெரிவித்து வந்தனர். மறுபுறம், கான்பூரில் உள்ள சிஎம்ஓ அலுவலகத்திற்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பி விசாரணை நடத்தியது. காவல்துறை அதிகாரியுடன் சுகாதாரத் துறை குழு விசாரணை நடத்த விம்லேஷின் வீட்டிற்குச் சென்றது.

அப்போது விம்லேஷின் கோமா நிலை குறித்து குடும்பத்தினர் தெரிவித்தனர். பிறகு நடத்திய விசாரணையில் விம்லேஷ் இறந்தது தெரியவந்தது. ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் சடலமாக கிடந்த தகவல் அப்பகுதியில் தீயாக பரவியது. அதே சமயம், குடும்பத்தினர் உடலை எடுக்க மறுப்பு தெரிவித்தனர் .

இன்னும் அவருக்கு உயிர் இருக்கிறது என்பதில் குடும்பம் உறுதியாக நின்றது. அதன்பேரில், விம்லேஷ் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், விம்லேஷ் ஒன்றரை ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

தற்போதைக்கு பிரேத பரிசோத்னைக்கு பிறகு முழு விஷயத்தின் உண்மை நிலை தெரியவரும். கான்பூர் துணை சிஎம்ஓ டாக்டர் கவுதம் கூறும் போது அவர் இறந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உறவினர்கள் அளித்த இறப்புச் சான்றிதழும் ஒன்றரை ஆண்டு பழமையானது, சான்றிதழை கான்பூரில் உள்ள மோதி மருத்துவமனை வழங்கி உள்ளது. இதில் விம்லேஷ் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என கூறினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!