முகத்தில் அசிங்கமான கரும்புள்ளிகளா? தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க..!


காலநிலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், முகத்தில் கரும்புள்ளிகள் உண்டாகி முகத்தில் அழகை கெடுப்பதோடு மனதையும் பாதித்து விடுகிறது. முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள ஒரே காரணத்தால் வெளியே செல்ல கூச்சப்படுகின்றீர்களா? கவலையை விடுங்கள். வீட்டில் கிடைக்கும் தக்காளியைக் கொண்டே நீங்கள் முகத்தை அழகாக்கலாம். அழகு நிலையம் செல்ல வேண்டிய தேவை இனி இல்லை.

தக்காளிக்கு சருமத்தை வெண்மையாக்கக்கூடிய சக்தி உண்டு. தக்காளியால் மாஸ்க் செய்து அதை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசினால் முகம் பொலிவு பெறும். முகத்தில் மட்டும் தான் கரும்புள்ளிகள் தோன்றும் என்பதில்லை. அது உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம்.

இப்போது தக்காளியை உபயோகித்து மாஸ்க் செய்வது எவ்வாறு என பார்ப்போம்.

01. தக்காளி மற்றும் யோகட்
ஒரு தேக்கரண்டி யோகட் மற்றும் ஒரு தேக்கரண்டி அரைத்த தக்காளி என்பவற்றை எடுத்து நன்கு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி 10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர் முகத்தை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். கிழமையில் 2 – 3 முறை இவ்வாறு செய்து வந்தால் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


02. தக்காளி மற்றும் ஓட்ஸ்
தக்காளியை நன்கு மசித்து அதனை 2 தேக்கரண்டி ஓட்ஸ் உடன் சேர்க்கவும். பின்னர் அந்தக் கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கொதித்தாறிய நீரில் கழுவவும். இந்த செய்முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்வது உத்தமம்.

03. தக்காளி மற்றும் கிழங்கு
ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாற்றுடன் அரைத்தேக்கரண்டி கிழங்குச் சாறை கலக்கவும். அந்த கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி இலேசாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழிந்த பின்னர் கொதித்தாறிய நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

04. தக்காளி மற்றும் சீனி
ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி சீனியை நன்கு கலக்கவும். இந்தக் கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி 10 நிமிடங்களின் பின்னர் கழுவி விட வேண்டும். இதை இருவாரங்களுக்கு ஒரு முறை செய்வது சிறந்தது.


05. தக்காளி மற்றும் முட்டை வெள்ளைக் கரு
முட்டை வெள்ளைக் கருவுடன் இரண்டு தேக்கரண்டி தக்காளிச் சாறை கலக்கவும். பின்னர் அந்தக் கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி 20 நிமிடங்களின் பின் இளஞ்சூடான நீரில் கழுவவும். இந்த செய்முறையை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்வது நன்று.

06. தக்காளி, ஆப்பிள் சாறு வினிகர் மற்றும் மஞ்சள்
இரண்டு தேக்கரண்டி தக்காளிச் சாற்றுடன் நான்கு துளி ஆப்பிள் சாறு வினிகர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூச வேண்டும். 5 அல்லது 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் அதனை கொதித்தாறிய நீரினால் கழுவ வேண்டும். மாதம் ஒரு முறை இவ்வாறு வெய்வதை கரும்புள்ளிகளை அடியோடு இல்லாமல் ஆக்கிவிடும்.

07. தக்காளி மற்றும் கற்றாளைச் சாறு
ஒரு தேக்கரண்டி தக்காளி மற்றும் கற்றாறைச் சாறை கலந்து உடம்பில் பூச வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது சருமத்திற்கு சிறந்த பலனைத் தரும்.– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!