பளார்னு அறைஞ்சிடுவேன்… மகன் மீது பயங்கர கோபத்தில் வனிதா!

மகன் விஜய் ஸ்ரீ ஹரி மீது பயங்கர கோபத்தில் உள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

ஆகாஷுடன் திருமணம்

விஜய்யின் சந்திர லேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டிலான வனிதா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விஜய் ஸ்ரீ ஹரி என்ற மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.

இரண்டாவது திருமணம்

2005 ஆம் ஆண்டு ஆகாஷை பிரிந்த வனிதா, 2007ஆம் ஆண்டு ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து 2012ஆம் ஆனந்த் ஜெய் ராஜனை விவாகரத்து செய்த வனிதா, நடன இயக்குநருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.

பீட்டர் பாலுடன்..

பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா விஜயகுமார். ஆனால் அந்த திருமணமும் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே அவரையும் பிரிந்தார் வனிதா. தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சறுக்கல்களை சந்தித்த வனிதா தற்போது சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சி, பிஸ்னஸ் என பிஸியாக உள்ளார்.

ஆகாஷோட பையன்

இந்நிலையில் வனிதா – ஆகாஷின் மகனான விஜய் ஸ்ரீ ஹரியிடம் நெட்டிசன் ஒருவர், வனிதாவோட பையனா நீங்கள் என்று கேட்டார். அதற்கு நான் ஆகாஷோட பையன் ப்ரோ என்று பதில் அளித்தார் ஹரி. இதனை தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வனிதாவிடம் விஜய் ஸ்ரீ ஹரியின் பதில் குறித்து கேட்கப்பட்டது.

பளார்னு அறைஞ்சிடுவேன்

அதற்கு, அது உண்மைதானே என்று கூறிய வனிதா, அவனுக்கும் எனக்கும் எந்த மனஸ்தாபமும் கிடையாது. நேரில் பார்த்தால் பளார் என்று அறைந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆள்தான் வளர்ந்திருக்கிறான், அறிவு வளரவில்லை, ரெண்டும் லூசுதான், அவனுக்குள் விஜயகுமார் ரத்தம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அம்மாவிடம் வராத மகன்

வனிதா ஆகாஷை பிரிந்தபோது இரண்டு குழந்தைகளும் இருவரிடமும் வளரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மகன் விஜய் ஸ்ரீ ஹரி கொஞ்ச நாளிலேயே தனது தாத்தா மற்றும் அப்பாவிடம் நிரந்தரமாக சென்று விட்டார். அதன்பிறகு வனிதாவிடம் வராத விஜய் ஸ்ரீ ஹரி, விஜயகுமார் மற்றும் ஆகாஷிடம் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!