200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமிக்கு நடந்தது என்ன..?

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள அப்பானேரி அருகே உள்ள ஜஸ்ஸா பாடா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்கிதா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, சிறுமி 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவர்கள் ஆய்வு செய்ததில் சிறுமி 60 முதல் 70 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்தது.

பின்னர், மீட்புப் பணிக்கு நான்கு மண் அள்ளும் இயந்திரங்கள், நான்கு டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையின் குழுக்கள் தலைமையில் மீட்புப் பணி நடைபெற்றது. ஆழ்துளை கிணற்றை சுற்றியுள்ள பகுதியை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு பின் தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் சிறுமியின் நிலை கண்காணிக்கப்பட்டது.

சிறுமிக்கு குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. இந்நிலையில், 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் சிறுமியை உடனடியாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தௌசா மாவட்ட ஆட்சியர் கும்மர் உல் ஜமான் சவுத்ரி தெரிவித்தார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!