நடிகருடன் லிவிங் டுகெதரில் வாணி போஜன்… பகீர் கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

நடிகை வாணி போஜன், நடிகர் ஜெய்யுடன் லிவிங் டுகெதரில் இருப்பதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

சினிமா நட்சத்திரங்களின் திரை மறைவு ரகசியங்கள் மற்றும் அந்தரங்கங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் வெளியிடும் வீடியோக்களுக்கு சினிமா பிரபலங்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் நடிகர் ஜெய் மற்றும் நடிகை வாணி போஜன் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.

சுப்பிரமணியபுரம்

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, நடிகர் ஜெய், தேவாவின் தம்பி மகன். ஆரம்பத்தில் கதாநாயகனாக அதிர்ஷ்டத்தில் நடிக்க வந்தார். சசிக்குமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் முதலில் பாக்கியராஜ் மகன் சாந்தனுவைதான் நடிக்க தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஆனால் கதை சொல்லும் போது பாக்கியராஜும் அவரது மகனும் அருகிலேயே இருந்து அதை மாற்று இதை மாற்று என்றார்கள்.

ஹீரோவான ஜெய்

இதற்கு மறுப்பு தெரிவித்த சசிக்குமார் என் கதை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நடியுங்கள் என்று கூறிவிட்டார். இதையடுத்துதான் ஜெய்யை ஹீரோவாக்கினார் சசிக்குமார். ஆனால் ஜெய்க்கு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் நடிக்க வாய்ப்பு வந்ததால் நல்ல படங்களில் நடித்தார்.

அஞ்சலியுடன் காதல்

நடிகர் ஜெய், அஞ்சலியை காதலித்தார். அஞ்சலியும் ஜெய்யை காதலித்தார். இருவரும் லிவிங் டுகெதரில் இருந்தனர். ஜெய்க்கு போதை பழக்கம் அதிகமானது. அஞ்சலி சொல்லியும் ஜெய் கேட்கவில்லை. போதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினார். அதன் பிறகு அஞ்சலி ஹைத்ராபாத் சென்றுவிட்டார். ஈசிஆரில் அஞ்சலியும் ஜெய்யும் அருகருகே ஃபிளாட்ஸ் வாங்கினர்.

முறிந்த காதல்

ஜெய்யை பிரிந்த பிறகு அந்த ஃபிளாட்ஸை விற்றுவிட்டு ஹைத்ராபாத் சென்றுவிட்டார் அஞ்சலி. ஹைத்ராபாத்தில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாக இருந்த அஞ்சலி தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஜெய்க்கு வாய்ப்பு இல்லாமல் போனது. கொரோனா நேரத்தில் சில மெட்டுக்களை போட்டார். இதையடுத்து ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் கமிட்டானார்.

வாணி போஜனுடன் நெருக்கம்

நடிகர் ஜெய் வெப் சீரிஸ் வாணி போஜனுடன் நடித்தார். இருவரும் நெருக்கமானார்கள். இதனால் வாணி போஜனுக்கு வாய்ப்பு குறைந்தது. ஆனால் வாணி போஜன் தினமும் இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்கிறார்கள் என்று கூறுகிறார். ஆனால் இயக்குநர் ஒருவர் என்னிடம் கூறியது, வாணி போஜனுக்கு கதை சொன்னேன். ஆனால் பிடிக்கவில்லை என்றார்.

லிவிங் டுகெதர்

திரும்பவும் ஒரு கதை சொன்னேன். அதையும் பிடிக்கவில்லை என்று கூறினார். வாணி போஜனுடன் ஜெய் இருந்தார். ஜெய் சம்மதித்தால்தான் வாணி போஜன் ஒப்புக்கொள்கிறார். வாணி போஜன் தற்போது ஜெய்யுடன் லிவிங் டுகெதரில் இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் உஷாராகிவிட்டேன்.. என வாணி போஜன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.. இவ்வாறு நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!