10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 73 வயது நடிகை

மலையாளத்தில் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் தனது 13 வயதில் இருந்து நூற்றுக்கணக்கான மலையாள நாடகங்களில் நடித்துள்ளார்.

ஜோ அண்ட் ஜோ, மகேஷிண்டே பிரதிகாரம், மகள் உள்ளிட்ட பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

லீனா ஆண்டனி சிறுவயதில் பத்தாவது வகுப்பு படித்தபோது தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். நடிகையானதால் தொடர்ந்து அவரால் படிக்க முடியாமல் போனது.

இவரது கணவர் ஆண்டனியும் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார்.

தற்போது 73 வயதாகும் லீனா ஆண்டனி 10-வது வகுப்பு தேர்வை மீண்டும் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதற்காக தீவிரமாக படித்து தற்போது பத்தாம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.

இது குறித்து லீனா ஆண்டனி கூறும்போது, நான் சினிமாவில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். அது பத்தாவது வகுப்பு பாடங்களையும் மனப்பாடம் செய்து தேர்வை எழுத எனக்கு உதவியாக இருந்தது என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!