27 வயது மாடல் அழகியுடன் நெருக்கம்… ‘டைட்டானிக்’ நடிகரின் புதிய காதல்!

லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும் 27 வயது மாடல் அழகி ஜிகிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஹாலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிராக உயர்ந்தவர் லியோனார்டோ டிகாப்ரியோ.

தொடர்ந்து ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்தார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஹாலிவுட்டில் நிறைய இளம்பெண்களுடன் லியோனார்டோ கிசுகிசுக்கப்பட்டு காதல் மன்னனாகவும் வலம் வந்தார்.

47 வயதான டிகாப்ரியோ கடந்த 4 ஆண்டுகளாக தன்னைவிட 22 வயது குறைவான நடிகை கமிலா மோரோனை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாகவும் வாழ்ந்து வந்தனர்.

இவர்களின் வயது வித்தியாசத்தை காரணமாக வைத்து விமர்சனங்களும் எழுந்தன. காதலுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று லியோனார்டோ பதில் அளித்து இருந்தார்.

சமீபத்தில் இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் புதிதாக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும் 27 வயது மாடல் அழகி ஜிகிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஹாலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.

மீண்டும் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை லியோனார்டோ காதலிப்பது ஹாலிவுட்டில் பரபரப்பாகி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!