3 கி.மீ. தூரம் ஓடி சென்று நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்!

பெங்களூரு சர்ஜப்புரா ரோட்டில் உள்ள மணிப்பால் தனியார் ஆஸ்பத்திரியில் இரப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் கோவிந்த் நந்தகுமார்.

இந்த நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கோவிந்த் நந்தகுமார் காரில் சென்று கொண்டு இருந்தார். அன்றைய தினம் அவர் ஒரு நோயாளிக்கு இரப்பை குடல் அறுவை சிகிச்சை செய்யவும் இருந்தார்.

சர்ஜப்புரா-மாரத்தஹள்ளி ரோட்டில் சென்ற போது கனமழையால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலில் கோவிந்த் நந்தகுமாரின் காரும் சிக்கி கொண்டது.

இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு சென்று நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய கோவிந்த் நந்தகுமார் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு நிற்காமல் ஓடி சென்றார்.

பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் நோயாளிக்கு அறுவை சிகிச்சையும் செய்து இருந்தார். இதுகுறித்து கோவிந்த் நந்தகுமார் கூறும்போது, நான் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாதோ என்று எனக்கு பதற்றம் உண்டானது. இதனால் காரில் இருந்து இறங்கி ஓடியே ஆஸ்பத்திரிக்கு சென்றேன் என்றார். டாக்டரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து கோவிந்த் நந்தகுமார் கூறும்போது, நான் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாதோ என்று எனக்கு பதற்றம் உண்டானது. இதனால் காரில் இருந்து இறங்கி ஓடியே ஆஸ்பத்திரிக்கு சென்றேன் என்றார். டாக்டரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!