இப்படியெல்லாம் மோசமா பேசினாங்க… சிம்பு பட நடிகை உருக்கம்!

தமிழில் வானம், ஜில் ஜங் ஜக் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஜாஸ்மின் பாசின். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதனிடையே இந்தி பிக்பாஸ் 14-வது சீசனில் பங்கேற்றும் பிரபலமானார்.

இந்நிலையில் தனக்கு பாலியல் மிரட்டல்கள் வந்ததாக ஜாஸ்மின் பாசின் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்தபிறகு பல கஷ்டங்களை சந்தித்தேன்.

பலர் என்னை பற்றி அவதூறாக பேசினார்கள். மோசமான வார்த்தைகளால் விமர்சித்தனர். மேலும் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. கற்பழித்து விடுவதாக சிலரிடம் இருந்து பாலியல் மிரட்டல்களும் வந்தன.

இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, அதில் இருந்து விடுபட முடியாமல் தவித்தேன். மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். என்னை நேசிப்பவர்களிடம் அன்பு காட்டுவேன், என்மீது வெறுப்பு காட்டினால் அது அவர்களின் விருப்பம்” என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!