கேஜிஎப் பட நடிகர் வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹரீஷ் ராய். இவர் கன்னடம் உள்பட பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற கே.ஜி.எப். படத்தின் 2 பாகங்களிலும் நடித்துள்ளார்.

படத்தில் இவர் நடித்த அனைத்து காட்சிகளும் பரபரப்பாக பேசப்பட்டன. இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் தற்போது பெங்களூருவில் உள்ள அரசு கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் பேசும் நடிகர் ஹரீஷ் ராய், தான் இதற்கு முன்பு தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் இருந்து மீள்வதற்குள் தற்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். ‘கே.ஜி.எஃப்’ படத்தில் நீண்ட தாடியுடன் நடித்திருப்பேன்.

இந்த நோயால், என் கழுத்தில் இருந்த வீக்கத்தை மறைக்கவே அப்படி வைத்திருந்தேன். என்னிடம் பணம் இல்லாததால் அறுவை சிகிச்சையைத் தள்ளி வைத்தேன். இப்போது நோய் தீவிரமடைந்து விட்டது. அவர் விரைவில் புற்றுநோயில் இருந்து குணமடைய வேண்டும் என்று கன்னட திரையுலகினர் பிராத்தனை செய்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!