கையில் தட்டுடன் நடு வீதியில் திடீரென அழ தொடங்கிய போலீஸ் கான்ஸ்டபிள்!

உத்தர பிரதேசத்தில் போலீசாருக்கு வழங்கப்படும் தரமற்ற உணவுக்கு எதிராக கான்ஸ்டபிள் ஒருவர் கையில் தட்டுடன் கண்ணீர் விட்டபடி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.

உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரில் காவல் பணியில் ஈடுபட்டு விட்டு சாப்பிட வந்த மனோஜ் குமார் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் கையில் தட்டுடன் நடு வீதிக்கு வந்து திடீரென அழ தொடங்கினார். அவரை சுற்றியிருந்தவர்கள் என்ன, ஏது என்று பார்த்தனர். அவர் கண்ணீர் விட்டபடியே, போலீசாருக்கான இந்த மெஸ்சில் வழங்கப்படும் உணவை பாருங்கள்.

நீரோடிய பருப்பு குழம்பு, அரைகுறையாக சமைக்கப்பட்ட ரொட்டி எங்களை போன்ற போலீசாருக்கு வழங்கப்படுகிறது. மூத்த போலீஸ் சூப்பிரெண்டு அதிகாரிகளிடம் பல முறை இதுபற்றி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 12 மணிநேரம் பணி முடிந்த பின்னர் அனைத்து போலீசாரும் இதனையே உணவாக உண்கின்றனர். இதனை ஒரு நாய் கூட சாப்பிடாது.

நாங்கள் இந்த உணவை சாப்பிட முடியாது. எங்களது வயிற்றில் எதுவும் இல்லாதபோது, நாங்கள் எப்படி எங்களுடைய கடமைகளை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!