இசையமைப்பாளரை ‘அப்படி’ குறிப்பிட்ட நடிகரின் முன்னாள் மனைவி!

நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியான பாடகி அம்ருதா சுரேஷும் பிரபல இசையமைப்பாளரான கோபி சுந்தர் ஆகிய இருவரும் திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிறுத்தை சிவாவின் தம்பி

பிரபல இயக்குநரான சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா. தமிழ் சினிமாவில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவரால் சோபிக்க முடியவில்லை.

அஜித்தின் வீரம்

இதையடுத்து மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய பாலாவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளும் வாய்ப்புகளும் குவிந்தன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இருப்பினும் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அஜித்தின் வீரம், தம்பி மற்றும் கடைசியாக ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்துள்ளார் பாலா.

பாடகியுடன் காதல்

தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார் பாலா. அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2010ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். 2012ஆம் ஆண்டு அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் பிறந்தார்.

விவாகரத்து

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 3 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நடிகர் பாலா கடந்த ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். இந்நிலையில் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ருதா சுரேஷ் இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது.

இசையமைப்பாளருடன் நெருக்கம்

இதையடுத்து இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அது குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடிய அம்ருதா சுரேஷ், தனது சகோதரி மற்றும் கோபி சுந்தருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், முதல்முறையாக கோபி சுந்தரை, கணவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரகசிய திருமணம்

இதனால் இருவரும் ஏற்கனவே ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் அதை இப்போதுதான் அறிவித்துள்ளதாகவும் மலையாள திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. கோபி சுந்தர், பிரியா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின் பாடகி அபயா ஹிரன்மயி என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

பெஸ்ட் கணவர்

பின்னர் இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து அம்ருதாவை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோ வெளியானது. இந்நிலையில் அம்ருதா கணவர் என குறிப்பிட்டுள்ளதன் மூலம் இருவருக்கும் திருமணம் முடிந்தது உறுதியாகியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!