மியான்மரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை!

ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் முன்னாள் எம்.பி. உள்பட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அந்த நாட்டு ராணுவம், கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

ராணுவம் இரும்பு கரம் கொண்டு இந்த போராட்டத்தை ஒடுக்கியது. ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு 2,000-க்கும் அதிகமானோர் பலியாகினர். இது ராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சி அமைப்புகள் உருவாக வழிவகுத்தது. இந்த கிளர்ச்சியாளர்கள் ராணுவ வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!