‘லைவ்’வில் முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற நபர் – அதிரடி தீர்ப்பு!

ஆன்லைன் ‘லைவ்’வில் முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற நபருக்கு தூக்க்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் லமு. இவர் சீனாவின் உள்ள சமூகவலைதள செயலியான டுவ்யுன் என்ற செயலில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக் போன்ற அம்சங்களை கொண்ட டுவ்யுன் செயலியில் லமு பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு லமு பிரபலமடைந்தார்.

லமுவின் கணவர் தங்லு. இவரும் டுவ்யுன் செயலில் பிரபலமான நபராக இருந்து வந்தார். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கணவன் மனைவி இடையே 2020-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. லுமுவை அவரது கணவர் தங் லு பல முறை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தங் லு-வை விட்டு பிரிந்த லுமு அவரை கடந்த 2020 ஜூலை மாதம் விவகரத்து செய்தார்.

ஆனால், விவாகரத்து செய்த பின்னரும் தன்னை மீண்டும் திருமணம் செய்துகொள்ளுமாறு லுமுவை அவரது முன்னாள் கணவர் தங் லு கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அந்த வகையில், கடந்த 2020 செப்டம்பர் மாதம் லுமு வீட்டிற்கு தங் லு வந்துள்ளார். அந்த சமயம் லுமு தனது சமூகவலைதள செயலியான டுவ்யுனில் புதிய வீடியோ தொடர்பாக ஆன்லைனில் ‘லைவ்’ வீடியோ வெளியிட்டுக்கொண்டிருந்தார். அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டிற்கு வந்த தங் லு தன் முன்னாள் மனைவி லுமு உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் ஆன்லைனில் ‘லைவ்’ வீடியோவாக ஒளிபரப்பாகியுள்ளது.

இந்த சம்பவம் சீனா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னாள் கணவன் தீ வைத்ததில் படுகாயமடைந்த லுமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் சில வாரங்களில் உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்ட லுமுவின் முன்னாள் கணவர் தங் லுவை போலீசார் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த குற்றம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தங் லு குற்றவாளி என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு அளித்தது. மேலும், குற்றவாளி தங் லுவுக்கு தூக்கு தண்டனை விதித்து.

இந்த தண்டனையை எதிர்த்து தங் லு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு கடந்த ஜனவரி மாதம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தங் லுவுக்கு தூக்கு தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது. முன்னாள் மனைவி லுமுவை தீ வைத்து எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி தங் லுவுக்கு நேற்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீன அரசு ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!