ரன்வீர் சிங் பாணியில் பிறந்தமேனியாக போஸ் கொடுத்த விஷ்ணு விஷால்!

வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பல தடைகளை தாண்டி வெளியான இவரது எஃப் ஐ ஆர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கி இருந்தார். தற்போது விஷ்ணு விஷால் ‘மோகன் தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்திற்கு திரையுலகினர் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரன்வீர் சிங் பாணியில் நடிகர் விஷ்ணு விஷால் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷால் மெத்தையில் அரை நிர்வாணமாக இடுப்புப் பகுதிக்கு கீழே வெள்ளை போர்வையை போர்த்தியபடி இருக்கிறார். மேலும், “நானும் டிரெண்டில் இணைகிறேன். புகைப்பட கலைஞர் எனது மனைவியாக இருக்கும்போது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!