கர்ப்ப காலத்தில் கை கால் குடைச்சல் வர காரணம் என்ன? இதில் எல்லாம் கவனமாக இருங்க..!


கர்ப்பிணிகளுக்கு கால்களில் ஏற்படும் ஒருவித குடைச்சல் காரணமாக அவர்கள் போதிய தூக்கம் இன்றி தவிப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த குடைச்சல் காரணமாக இரவில் நிம்மதியாக நித்திரை கொள்வதென்பது எட்டாக் கனியாகிவிடுகின்றது. இதனால், பகல் வேளைகளில் அரைத்தூக்க நிலை அல்லது ஒருவித மந்த நிலைமை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது.

இந்த நிலைமையால் தாய்மார்கள் அன்றாட வேலைகளை சரிவர செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். அவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகள் என்னவென்று பார்ப்போம்.


தூக்கமின்மை
கால்களில் ஏற்படும் இந்த குடைச்சல் காரணமாக அடிக்கடி கால்களை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு தாய்மார்களுக்கு ஏற்படும். குறிப்பாக இரவு வேளைகளிலேயே இந்த நிலைமை அதிகளவில் ஏற்படும். கால்கள் அடிக்கடி அசைவதனால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.

அரைத்தூக்க நிலை
இரவு முழுவதும் நித்திரையின்றி அவதியுறுவதால் பகல் வேளைகளில் மந்த கதியுடன் கூடிய அரைத்தூக்க நிலைமை ஏற்படும். கால் குடைச்சலால் பாதிக்கப்படாத தாய்மார்களுடன் பாதிக்கப்பட்ட தாய்மார்களை ஒப்பிட்டு பார்க்கும் போது குறித்த தாய்மார்கள் மிகவும் அவதியுறுவதை அவதானிக்க முடியும். இது போன்ற நிலைமை ஏற்படுவது அவ்வளவு நல்லதல்ல எனவே கூறமுடியும்.


ஹோர்மோன், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஃபோலேட் மற்றும் உளவியல் காரணிகள் ஆகியனவே கால்குடைச்சல் ஏற்படக் காரணமாக அமைகின்றது.
எனினும், வைத்தியரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த நிலைமையை தவிர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.-© tamilvoicenews.com | All Rights Reserved

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி