மாணவி ஸ்ரீமதியின் உடலை புதைக்க திடீர் முடிவு!

மாணவி ஸ்ரீமதியின் உடலை தகனம் செய்வதாக இருந்த நிலையில், மாணவியின் உடலை புதைக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். மாணவி ஸ்ரீமதி இறந்தது முதல் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாக தெரிவித்து. ஆனாலும் மாணவி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதன்காரணமாக, மாணவி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துக்குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ரு காலை மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது. இதனையடுத்து பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், தற்போது உடலை புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.சற்று முன்பு, ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திடீரென பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் உடலை பரிசோதனை செய்வதற்காக புதைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!