5 வயதில் அனாதையானேன்… பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் கண்ணீர் கதை!

5 வயதில் குடும்பத்தை இழந்து சென்னைக்கு அனாதையாக வந்த சோகக் கதையை சொல்லியிருக்கிறார் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சதீஷ் குமார்.


தம்பியை இழந்து, பெற்றோரை விபத்தில் பறிகொடுத்துவிட்டு சென்னைக்கு அனாதையாக வந்தேன் என்கிறார் நடிகர் சதீஷ் குமார்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து பிரபலமானவர் சதீஷ் குமார். கோபியாக நடிக்கிறார் என்பதை மறந்து அவரை பார்வையாளர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சதீஷின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த பிறகு சதீஷை பார்த்து ரசிகர்கள் பாவப்படுகிறார்கள்.

அனாதை

அந்த வீடியோவில் சதீஷ் கூறியிருப்பதாவது, நான் சதீஷ் பேசுறேன். கோபியை அவன் மூஞ்சியில ஒரு குத்து. கோபியை தூக்கி குப்பையில போடுங்க. ஒரு முக்கியமான பெண்மணியை பற்றி பேசப் போகிறேன். அவங்க பெயர் தமிழ். 5 வயதிலேயே என் தம்பியை இழந்து, அப்பா, அம்மாவை விபத்தில் இழந்து ஒரு அனாதையாக சென்னைக்கு வந்தேன் என்றார்.

அத்தை

சதீஷ் குமார் மேலும் கூறியதாவது, 2 சொக்கா, 2 அரை டிரவுசர் வச்சுக்கிட்டு வந்தேன். எங்க அத்தை வீட்டில் தான் நான் வாழ்ந்தேன், வளர்ந்தேன். அதான் மொழி, எனக்கு பேச சொல்லிக் கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, இன்று வருமானம் கொடுத்து, பெயர் புகழ் கொடுத்து, இன்றும் என்னை வாழ வைப்பது என் தமிழன்னை தான். என்னை பொறுத்த வரை தமிழ் ஒரு மொழி இல்லை. மொழி என்ன அது ஒரு கலாச்சாரம், அது ஒரு மதம், அது ஒரு சக்தி. நீங்க என்ன நினைக்கிறீங்க?. வாழ்க தமிழ் என்றார்.

பாவம்

5 வயதில் அனாதையாக ஊரை விட்டு வருவது கொடுமை. கோபிக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தது தெரியாமல் போய்விட்டதே. நீங்கள் என்ன தான் கோபியை தூக்கி குப்பையில் போடச் சொன்னாலும் அது மட்டும் எங்களால் முடியாது. உங்களை பார்த்தாலே சதீஷ் என்பதை மறந்து கோபி தான் நினைவுக்கு வருகிறது. நடந்தது நடந்துவிட்டது. உங்கள் வாழ்க்கை தொடர்ந்து சந்தோஷமாக இருக்க பிரார்த்தனை செய்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!