நடிகர் திலீப் ஒரு அப்பாவி… பெண் டிஜிபி பரபரப்பு பேட்டி.!

நடிகர் திலீப் அப்பாவி என்று முன்னால் கேரளா பெண் டிஜிபி யூடிப் ஒன்றில் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை கடத்தல் சம்பவம் கேரளா சினிமா உலகை உலுக்கியது. படப்பிடிப்பிலிருந்து வீடு திரும்பிய நடிகையை திடீரென காணவில்லை என போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் நடிகையை காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்திருத்ததை தொடந்து கடத்தல்காரர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளிகளும் பிடிபட்டனர். இவர்களில் முதல் குற்றவாளியாக நடிகர் திலீப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி, சகோதரர் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையை சித்ரவதை செய்யும் வீடியோவை தனது செல்போனில் வைத்திருந்ததையடுத்து அவர் மீதான விசாரணை தீவிர படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் நடிகை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து தன் முன்னாள் கணவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முயற்சித்து வருகிறார்.

இந்நிலைகள் ஓய்வு பெற்ற கேரள முன்னால் காவல்துறை அதிகாரி ஸ்ரீலேகா என்பவர் தனது யூடிப் சேனலில் திலீப் மீதான குற்றச்சாற்று 100% தவறானது என கூறியுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் நிரபராதி என கூறியுள்ள ஸ்ரீலேகா, குற்றவாளிகளாக இருக்கும் ஐந்து முதல் ஆறு பேர் திலீப்பை பின் தொடராமல் இருந்திருந்தால் இந்நேரம் காவல்துறையினால் பிடிப்பட்டிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் திலீப்பிறகு எதிராக போலீஸ் வைத்திருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் போலியானவை. திலீப் ஒரு அப்பாவி. காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், அவர்கள் தவறு செய்திருந்தால், அதை ஏன் அவர்களால் ஒப்புக்கொள்ள முடியாது? ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஒரு முன்னாள் பெண் டிஜிபி திலீப்பிற்கு ஆதரவாக பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் பல அதிர்வலைகளை கிளப்பி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!