நடிகை கிரண் செய்த மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி புகார்!

நடிகை கிரண் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாக ரசிகர்கள் புகர் அளித்துள்ளனர்.


தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கியுள்ளார்
நடிகை கிரண் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கிரணின் இந்த செயலியை முடக்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தார் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை வாரிக்குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடத்த திருமலை படத்தில் “வாடியம்மா ஜக்கம்மா” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் பாடலுக்கு ஆட ரெடி என பச்சைக்கொடிகாட்டினார்.அதன் பிறகும் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட்,டெலிவுட் என அலைந்து அலுத்துப்போனார். இதையடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டி ரோலில் நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஒவர் கவர்ச்சி காட்டினார். நடிகை கிரணுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை.

இதனால் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினார் கிரண். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால், நித்தம் நித்தம் எல்லை மீறும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பணத்தை அள்ளினார்.இதுல வர பணமும் மேடமுக்கு பத்தாததால், தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கினார்.

அந்த ஆப் மூலம் கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கு 2000 ரூபாயும், வீடியோ காலில் அரை மணி பேசுவதற்கு 30,000 ரூபாயும், 15 நிமிடங்கள் பேசுவதற்கு 13,000 ரூபாய் கட்டணம் என ஒரு லிஸ்டையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதுமட்டுமின்றி, இந்த ஆப்பிற்குள் நுழையவே 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.

இதன் மூலம் நடிகை கிரண் பல பித்தலாட்ட வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் ஆடியோ காலில் பேச ஒருவர் ரூ.5 ஆயிரம் செலுத்தினாராம். சிறிது நேரம் கழித்து அழைப்பு வந்ததும், அதை எடுத்து ஹலோ என்று சொன்னதும் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கிரண் ஆசைகாட்டி ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் எழுந்துள்ளது. கிரணின் இந்த செயலியை முடக்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!