‘அந்த’ வார்த்தை… நொறுங்கி போயிட்டேன்… மீனாவை நினைத்து கண்கலங்கிய பிரபலம்!

நடிகை மீனாவின் நிலைமை தனது எதிரிக்கு கூட வரக்கூடாது என நடன இயக்குநரான கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப்பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கூடவே இருந்த கலா

அவரது உடல் கடந்த புதன்கிழமை சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகளுக்கான பணிகள் அனைத்தையும் மீனாவின் தோழியும் நடன இயக்குநருமான கலா மாஸ்டர்தான் கூடவே இருந்து கவனித்துக்கொண்டார். இறுதிவரையும் மீனாவுடன் இருந்து பார்த்துக்கொண்டார் கலா மாஸ்டர்.

சேச்சி என்றுதான் அழைப்பார்

இந்நிலையில் வித்யாசாகர் மறைவு குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கலா, மீனா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, மீனாவும் நானும் 25 ஆண்டுகள் தோழிகளாக இருக்கிறோம். வித்யாசாகர் என்னை சேச்சி சேச்சி என்றுதான் அழைப்பார். மீனாவுடைய நல்லது கெட்டது எல்லாத்துலேயும் நான் இருப்பேன்.

கோவில் கோவிலாக..

நல்லதுல இல்லன்னாலும் கண்டிப்பா இந்த மாதிரியான விஷயங்கள்ல கூட இருப்பேன். 3 மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை தேற்றிக்கொண்டுவர மீனா என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்தார். கோவில்கள், மருத்துவமனை என என்றுதான் இருந்தார்.

இப்படி பார்க்க முடியல

எப்போதும் குழந்தைத்தனமா சிரிச்சுக்கிட்டே இருக்கும் மீனாவை இப்படி பார்க்க முடியல. வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்துச்சு. கொரோனாவுக்கு அப்புறம்தான் அவருக்கு நுரையீரல் பிரச்சனை வந்ததே தெரியவந்துச்சு. மீனாவும் சாகரும் அவங்கவங்க வேலையில அழகா விட்டுக்கொடுத்து செய்வாங்க.

அந்த ஒரு வார்த்தை

மீனா எனக்கு மட்டும் ஏன் சேச்சி இப்படி நடக்குதுன்னு கேட்ட அந்த ஒரு வார்த்தையை என்னால தாங்கிக்க முடியல. பிரண்டா மீனாவுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்வோம். இவ்வாறு கலா மாஸ்டர் உருக்கமாக பேசியுள்ளார். கலா மாஸ்டரும் மீனாவும் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!