எனக்கு அப்பா வேணாம்… எலான் மஸ்கின் திருநங்கை மகள் பகீர் செயல்!

பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்திலும் பெயரை மாற்றி தருமாறு இவர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு ஜெனிஃபர் ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்தார். இவர்களின் திருமண வாழ்வு 2008 ஆம் ஆண்டுக்கு முடிவுக்கு வந்தது. இவர்கள் இருவருக்கும் 5 குழந்தைகள் உள்ளன.

அவர்களில் ஒருவர் மகள் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க். திருநங்கையான இவர் தற்போது 18 வயதை எட்டியுள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது தனது பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களிலும் தனது பெயரை “, விவியன் ஜென்னா வில்சன்” என மாற்றி தருமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தந்தை எலான் மஸ்க் சார்ந்த எதுவும் பெயரளவில் கூட தன்னை பின் தொடரக் கூடாது என விவியன் கூறியுள்ளார். அதே நேரத்தில் எலான் மஸ்க்கிற்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட உறவு முறிவு குறித்த விளக்கம் இல்லை.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!