முகத்தோடு முகம் வைத்து செம ரொமான்ஸ்… தீயாய் பரவும் ஹனிமூன் போட்டோஸ்!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ஹனிமூன் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.


நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ஹனிமூன் போட்டோக்கள் வெளியாகி இணையத்தை திணறடித்து வருகிறது.
மனைவியாக்கினார்

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று இருவரையும் வாழ்த்தினர். தங்களின் திருமண போட்டோக்களை முதல் ஆளாக வெளியிட்டு நயன்தாராவை மனைவியாக்கிக் கொண்டதாக கூறினார்.

ட்ரெண்டிங்

அவர்களின் திருமணம் போட்டோக்கள் இணையத்தில் பெரும் ட்ரெண்டானது. நயன்தாராவும் விக்கியும் திருமணத்திற்கு முன்பே சாதாரணமாக ஏதாவது செய்தாலே இணையத்தில் வைரலாகி விடும். தற்போது சொல்லவா வேண்டும்? திருப்பதி பயணம், செய்தியாளர் சந்திப்பு, கேரளா பயணம் என அனைத்தும் இணையத்தை தெறிக்கவிட்டது.

தாய்லாந்தில் ஹனிமூன்

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போட்டோக்கள் வெளியானது. பின்னர் விக்னேஷ் சிவன் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருப்பதாக கூறி அங்கிருந்த போட்டோக்களை வெளியிட்டார்.

முகத்தோடு முகம்..

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ஹனிமூன் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சள் நிற கவுன் அணிந்து கொண்டை போட்டுள்ளார் நயன்தாரா. சூரிய வெளிச்சத்தில் அமர்ந்துள்ளார் நயன்தாரா. மனைவியான நயன்தாராவின் கன்னத்தில் கை வைத்து முகத்தோடு முகம் வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

கைகளைப் பற்றி…

மற்றொரு போட்டோவில் சேரில் அமர்ந்திருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் கழுத்தை அணைத்து முகத்தோடு முகம் பதித்துள்ளார். இன்னொரு போட்டோவில் நயன்தாராவின கைகளைப் பற்றியப்படி உள்ளார் விக்னேஷ் சிவன். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!