மாலத்தீவில் நெருக்கடி நிலைமை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது..!


மாலத்தீவில் 12 எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உருவானது.

எனவே அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்ததுடன், 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அத்துடன் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியது.

முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமை மாலத்தீவு போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மவுமூன் அப்துல் கயூம், அதிபர் யாமீனின் சகோதரர் ஆவார்.

இதையடுத்து இன்று அதிகாலை மாலத்தீவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதித்துறை நிர்வாக அதிகாரி ஹசன் சயீத் உசைனும் கைது செய்யப்பட்டார்.

சாலைகளில் ராணுவம் ரோந்து சுற்றி வருகிறது. போராட்டங்களை ஒடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசும் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாலத்தீவு முழுவதும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.-Source:.maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!