பிரபல டிவி சேனல் ஹெட் மடில உட்கார சொன்னாரு – நடிகை ஸ்ரீநிதி பகீர் புகார்!

பட வாய்ப்பு தருவதாக கூறி டிவி சேனல் ஹெட் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சீரியல் நடிகை ஸ்ரீநிதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.


சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. விஜய் டிவியில் அறிமுகமாகி யாரடி நீ மோகினி சீரியலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி. வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் ஸ்ரீநிதி அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


‘வலிமை’ படம் தொடர்பாக இவர் பகிர்ந்த நெகட்டிவ் விமர்சனங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் இவரை சமூக வலைத்தள பக்கங்களில் கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வைத்தனர். இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் டிப்ரஷன் தொடர்பாக ஸ்ரீநிதி பகிர்ந்திருந்த விஷயங்கள், அதிகம் பரபரப்பை உண்டு பண்ணியது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி அவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவரது அம்மா, ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ரீநிதி, ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என சொல்லி ஆபிசுக்கு வர சொன்னார்கள். ஆனால் அது பார்ப்பதற்கு வீடு போல இருந்தது. அதன் உள்ளே ஆபிஸ் செட்டப் வைத்திருந்தார்கள். அப்போது அந்த சேனலின் ஹெட் என்னிடம் தவறாக அணுகினார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!