வைரலான விக்கிபீடியா பதிவு – நயன்தாரா கணவர் சிம்பு.!

விக்கிபீடியாவில் நயன்தாராவின் கணவர் சிலம்பரசன் என்று யாரோ குசும்புக்காரர்கள் செய்த காரியம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் இன்று திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.

திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த ரசிகர்களுக்கு லைட்டா ஏமாற்றமே. நயன்தாரா பட்டுப் புடவைக்கு பதிலாக வடநாட்டு முறைப்படி உடை அணிந்தது அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இந்நிலையில் யாரோ குசும்புக்காரர் செய்த காரியம் நயன்தாரா ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. விக்கிபீடியா பக்கத்தில் நயன்தாராவின் கணவர் என்கிற இடத்தில் சிலம்பரசன் டி.ஆர். என்று எழுதி வைத்துள்ளனர்.


சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்தது உண்மை தான். ஆனால் அவர்களே அதை எல்லாம் மறந்துவிட்டு நட்பாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் யாரோ இப்படி ஒரு காரியம் செய்தது, அதுவும் திருமணம் நடந்த அன்று செய்ததை நயன்தாரா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!