நெஞ்சுவலியுடன் நடத்தியே அழைத்து செல்லப்பட்ட கேகே… திடுக்கிட வைக்கும் இறுதி நிமிட வீடியோ!

பாடகர் கேகே நெஞ்சுவலியுடன் நடத்தியே ஆம்புலன்சுக்கு அழைத்து செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


பாடகர் கேகே நெஞ்சுவலியுடன் நடத்தியே ஆம்புலன்சுக்கு அழைத்து செல்லப்படும் பகீர் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மாரடைப்பால் மரணம்

பிரபல பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பால் காலமனார். கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது குடும்பம் டெல்லிக்கு குடி பெயர்ந்ததால் கேகே பிறந்து வளர்ந்ததெல்லாம் டெல்லியில் தான்.

அறிமுகம் செய்த ஏஆர் ரஹ்மான்

ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கும் விளம்பர படங்களுக்கும் ஜிங்கிள்ஸ் பாடிக் கொண்டிருந்தார் கேகே. அவரது குரலால் கவரப்பட்ட இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், தனது இசையில் உருவான காதல் தேசம் படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்தார். அந்த படத்தில் அடுத்தடுத்து இரண்டு பாடல்களை பாடும் வாய்ப்பை பெற்ற கேகேவின் சினிமா கிராஃப் அதன்பிறகு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

தமிழில் 60க்கும் மேல்

இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒடியா, அசாமி, பெங்காலி என பல மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் கேகே. தமிழில் 60க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் கேகே. அவர் பாடிய அத்தனை பாடல்களுமே செம ஹிட். இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரியின் கலாச்சார விழாவில் பங்கேற்றார் கேகே.

இறுதி நிமிடங்கள்

நிகழ்ச்சி முடிந்து அறைக்கு சென்ற கேகேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கேகே சிகிச்சை பலனின்றி காலமானார். 53 வயதே ஆன கேகேவின் மரணம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது இறுதி நிமிடங்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

பெரிய தவறு

இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஒருவரை நடத்தி அழைத்து செல்வது பெரிய தவறு என்றும், வீல் சேர் அல்லது ஸ்ட்ரெச்சரில் வைத்துதான் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் எந்த முதலுதவியும் அளிக்கப்படாதது ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படாதது உச்சக்கட்ட துயரம் என்றும் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

நடத்தியே அழைத்து செல்கின்றனர்…

அந்த வீடியோவில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பாடகர் கேகேவை கல்லூரி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். எந்த முதலுதவியும் அளிக்காமல் நடத்தியே அவரை அறையில் இருந்து அழைத்து செல்கின்றனர். இதில் வியர்வை சொட்ட சொட்ட பதட்டத்துடனே நடந்து செல்கிறார் கேகே.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!