சித்துவுக்கு நடந்தது தான் நட்சத்திராவுக்கும் நடக்கும் – ஸ்ரீநிதி கதறல்!

விஜே சித்ராவை எப்படி மிஸ் பண்றீங்களோ அதே போன்று நடிகை நட்சத்திராவையும் மிஸ் பண்ணுவீங்க என ஸ்ரீநிதி எச்சரித்துள்ளார்.


தன் தோழியான நடிகை நட்சத்திரா பற்றி ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராம் வீடியோவில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

அந்த வீடியோவில் ஸ்ரீநிதி கூறியதாவது,

நட்சத்திராவுக்கு ஒரு பையனை பிடிச்சிருக்கு. அவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. இவர் ரொம்ப நல்லவரா இருக்காரே, பாரு நக்ஷு ஷூட்டுல இருக்காருனு சொன்னேன். அவருடன் பேசினாள். ஒரு மாசத்துல கல்யாணமே முடிவு பண்ணிட்டான் அவன். அது எப்படினே தெரியல. இந்த மாதிரி ஒரு பெண்ணை ஏன் விடனும்னு புடுச்சு வச்சுட்டான். நவம்பர் 18ம் தேதி நட்சத்திராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் எங்களுக்கு தெரியாது.

எனக்கு சித்துனு ஒரு தோழி இருந்தாங்க. அவங்க ஒருவரை காதலிச்சாங்க. சித்துக்கிட்ட பேசு, பேசுனு என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் சொன்னாங்க. நான் பேசல. அவங்க பர்சனல்னு விட்டுட்டேன். என் பிறந்தநாளுக்கு மறுநாள் சித்து இறந்துட்டாங்க. அது தான் என் வாழ்க்கையின் மோசமான நாள்.

சித்துவுக்கு நடந்ததில் இருந்தே எனக்கு பயம். அதனால் தான் நக்ஷுவின் விஷயம் என்னை பாதித்தது.
அவளே அதை விட்டு வரணும்னு நினைச்சேன். அவங்க பெயரை கெடுக்க வேண்டாம்னு பெயரை சொல்லவில்லை.

தன்னைத் தானே பாவம்னு நினைக்கும் ஆள் நக்ஷு. அதனால் அவளை இப்படி மிஸ்யூஸ் பண்றாங்க. நக்ஷூவோட லைஃப் மட்டும் அந்த மனுஷனோட இருந்தால், சித்துவ எப்படி மிஸ் பண்றீங்களோ அதே மாதிரி தான் நக்ஷுவையும் மிஸ் பண்ணுவீங்க. நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் என்றார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!