சிம்பு தான் லவ் டார்ச்சர் பண்றாரு… சீரியல் நடிகை பரபரப்பு புகார்!

சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுப்பதாக சீரியல் நடிகை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.


சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. விஜய் டிவியில் அறிமுகமாகி யாரடி நீ மோகினி சீரியலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி. வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததாக ஸ்ரீநிதி தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.


‘வலிமை’ படம் தொடர்பாக இவர் பகிர்ந்த நெகட்டிவ் விமர்சனங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் இவரை சமூக வலைத்தள பக்கங்களில் கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வைத்தனர். இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் டிப்ரஷன் தொடர்பாக ஸ்ரீநிதி பகிர்ந்திருந்த விஷயங்கள், அதிகம் பரபரப்பை உண்டு பண்ணியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றெல்லாம் பதிவிட்டிருந்தார் ஸ்ரீநிதி.

ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல செய்திகள் இணையத்தில் வெளியானது. இதனை கண்டு அவரின் தந்தை ஸ்ரீநிதிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி ‘நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா. சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே’ என்று பதில் அனுப்பி அளித்துள்ளார்.


இது குறித்த ஸ்கீரின் ஷாட்டை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, ‘என்னிடம் சிம்பு குறித்து கேட்பதற்கு பதிலாக ஏன் நீங்கள் அனைவரும் என்னை பற்றி அவரிடம் கேட்கமாட்றீங்க. நான் பொய் சொல்லவில்லை. சமூக வலைதளத்தில் நான் உண்மையாக இருக்கிறேன். அவரை பற்றி எந்த பேட்டியையையும் நான் கொடுக்க மாட்டேன். அவரே கொடுக்கட்டும். என்னை விட்டுவிட்டு அவரை கேளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீநிதி.

ஸ்ரீநிதியின் இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். எங்க தலைவன் இப்போ தான் சர்ச்சை எதுவும் இல்லாம, நிம்மதியா இருக்காரு. அது உங்களுக்கு பொறுக்கலையா? பேமஸ் ஆக எவ்வளவோ வழி இருக்கு. ஒருத்தரை டேமேஜ் பண்ணி தான் பேமஸ் ஆகணுமா? என கண்டமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!