10 நிமிடம் நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா… சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிக்க பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

வட சென்னை

அரண்மனை, விஸ்வரூபம், உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தன. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படம் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.

ஊ சொல்றியா மாமா

அதனை தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. படங்களில் நடித்த வந்தாலும் பின்னணி பாடுவதையும் தொடர்ந்து வருகிறார் ஆண்ட்ரியா. புஷ்பா படத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா ஊஹும் சொல்றியா மாமா பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி செம ஹிட்டடித்தது.

நிர்வாணமாக

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. மிரட்டலான பேய் படமான இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா ஆடையில்லாமல் நடித்த காட்சிகள் 10 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பளம்

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க 50 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!