பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒரு பாலிவுட் நடிகரா..?

பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கிய நீதிபதியான எல். நாகேஸ்வர ராவ் வரும் ஜூன் 7-ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார்.

கடந்த மே 18-ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி

நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கிய நீதிபதியான எல். நாகேஸ்வர ராவ் வரும் ஜூன் 7-ஆம் தேதியுடன் ஓய்வு பெற
இருக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

இதில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு துணை தலைவர் பிரதீப் ராய் என்பவரும் கலந்து கொண்டார். மூத்த வழக்கறிஞரான அவர் விழாவில் பேசியதாவது:-

நீதிபதி நாகேஸ்வர ராவ் பாலிவுட் படம் உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். இந்தியில் நடிகர்கள் காதர் கான் மற்றும் சஞ்சய் தத்
நடித்த கனூன் அப்னா அப்னா என்ற படத்தில், காவல் ஆய்வாளர் வேடத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் நடித்துள்ளார்.

மேலும் நீதிபதி நாகேஸ்வர ராவ் பன்முக திறமை வாய்ந்தவர். அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரரும் கூட. உயர்ந்த தலைவரான அவர் ஒவ்வொரு துறையிலும் பங்காற்றி இருக்கிறார்.

இவ்வாறு பிரதீப் ராய் கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!