பெண்கள் அனைவரும் பொதுவாகவே அந்தரங்க உறுப்புகளில் ரோமங்கள் இருப்பதை விரும்ப மாட்டார்கள். மாதவிடாய் முடிந்து ஒருவாரத்திற்கு பிறகே அந்தரங்க பாகங்களில் வாக்ஸ் செய்வது நல்லது.
அந்தரங்க உறுப்புகளில் வளரும் முடிகளை அகற்ற பல வழிமுறைகளை பெண்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஷேவிங், வாக்ஸிங், சுகரிங், எலெக்ட்ரோலைசிஸ், லேசர் மற்றும் கிரீம் போன்று பலவற்றை செய்கிறார்கள். இதில் சிலது பார்லர், ஸ்பா மற்றும் காஸ்மெடால ஜிஸ்டிடம் செய்யப்படும். ஒருமுறை கூட வாக்ஸ் செய்யாதவர்களுக்கும், செய்து நெடுநாட்கள் ஆனவர்களுக்கும் முதலில் எலெக்ட்ரி ரேசர் அல்லது கத்திரிக்கோல் கொண்டு முடிகளை வெட்டிவிட வேண்டும்.
தொடையின் மேல்புறத்தில் பேட்ச் பரிசோதனைக்கு பிறகே பிகினி வாக்ஸ் செய்யப்படும். நமக்கு ஒவ்வாமை ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளதான் இந்த பரிசோதனை. நம் உடலிலே மிக முக்கியமான பகுதி என்பதால் வாக்ஸிங் செய்யும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பிகினி வாக்ஸ் செய்யும்போதும் செய்தபிறகும் பல நிமிடங்களுக்கு அங்கு வலியுடன் கூடிய வீக்கம் இருக்கும். உடலின் மற்ற இடங்களில் பயன்படுத்தும் வாக்ஸை நாம் பிகினி வாக்ஸுக்கு பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அங்குள்ள ரோமம் அடர்த்தியாக இருக்கும். ஆதலால் பீஸ் வாக்ஸ் மற்றும் டால் ஆயில் கொண்டு தயார் செய்யப்படும் வாக்ஸால் மட்டுமே ரோமங்களை அகற்ற முடியும்.
எப்போதுமே மாதவிடாய் முடிந்து ஒருவாரத்திற்கு பிறகே அந்தரங்க பாகங்களில் வாக்ஸ் செய்வது நல்லது. மாதவிடாய்க்கு முன்பும், மாதவிடாய் காலத்திலும் செய்தோமானால் அதீத வலி உண்டாகும் என்பதால் அந்நாட்களில் தவிர்ப்பது நல்லது. மேலும் வாக்ஸிங் செய்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஷேவ் செய்யக்கூடாது. பெண்கள் அனைவரும் பொதுவாகவே அந்தரங்க உறுப்புகளில் ரோமங்கள் இருப்பதை விரும்ப மாட்டார்கள்.
ஷேவ் செய்யும்போது ஏற்படும் சில காயங்களால் எளிதில் பாக்டீரியா, வைரஸ்களால் சில தொற்று நோய்கள் எளிதில் உடலுக்குள் ஊடுருவி விடும். ஷேவ் செய்வதற்கு பதிலாக ட்ரிம் செய்துகொள்வதும் நல்லது அல்லது வாக்ஸ் செய்தும் கொள்ளலாம். இதனால் நம் உறுப்பு சுத்தமாக இருக்கும்.
தண்ணீர் அல்லது வெஜைனல் வாஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். ஆனால் அதிகளவில் வாஷ் உபயோகிக்கும்போது வறண்டு போய்விடும். ஷேவ் செய்வதற்கு பதில் வாக்சிங் செய்வதனால் நம் ரோமங்கள் தோலின் அடியில் இருந்து அதாவது வேருடன் வெளிவருவதால், மீண்டும் முடி வளருவதற்கு அதிக நாட்கள் ஆகும்.
மேலும் எந்தவித காயமோ கீறலோ இன்றி ரோமங்களை அகற்றுவதில் சிறந்தது வாக்சிங். நம் தோலின் நிறத்தையும் கருக்க செய்யாது. சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு ஷேவ் செய்யும்போது ரேஷஸ் வரும் வாய்ப்புள்ளது.மேலும் தோல் வறண்டு அதிகப்படியான ரோம வளர்ச்சி இருக்கும்.
வாக்சிங் செய்வதால் நம் ரோமத்தின் அடர்த்தி குறையும். நம் சருமத்தை மிருதுவாக்கும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!