எல்லோரும் உங்களையே பார்க்கனுமா..? சர்க்கரைவள்ளி கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க..!

பருவநிலை மாற்றங்களுக்கேற்ப சருமங்களில் பல்வேறு மாற்றங்கள் உண்டாவது இயற்கை. இவ்வாறு சருமங்களில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்ய நாம் விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும்.

பார்லருக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் வீட்டிலிருந்தபடியே பார்லரில் கொடுக்கப்படும் அதே சரும சிகிச்சையை நாமும் மேற்கொள்ள முடியும். அதுவும் இயற்கைப் பொருட்களைக் கொண்டே, ஸ்பா சிகிச்சையைப் போன்ற உயர்தர பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.

ஸ்பாக்களில் மேற்கொள்ளப்படுகிற சில வழிமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டாலே போதும். எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பளிச் சருமத்தைப் பெறமுடியும்.

சில இயற்கைப் பொருட்கள் மூலம் அப்படி பளீச் சருமத்தைப் பெறலாம்…

சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்கிரப்

1 ஸ்பூன் வேகவைத்த சக்கரைவள்ளிக்கிழங்குடன் 1 ஸ்பூன் ஓட்ஸ், 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொண்டு, அதை முகத்தில் தடவி, வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். பின் நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு, முகத்தைக் கழுவவும்.


ஃபேஸ் மாஸ்க்

தேன், தயிர், முட்டையின் வெள்ளைக்கரு மூன்றையும் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, அதை முகத்தில் மாஸ்க்காகப் பயன்படுத்திவர, சருமத்தின் நிறம் மேம்படும்.

ஹெர்பல் டீ ஃபேசியல் டோனர்

ஹெர்பல் டீ பவுடரை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, பின் குளிர வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரை முகம் கழுவ பயன்படுத்தலாம். இது முகத்துக்குப் புத்துணர்ச்சியைத் தருவதோடு சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

பற்களுக்கான பேஸ்ட்

பேக்கிங் சோடாவுடன் சமஅளவு ஸ்ட்ராபெர்ரி கலவையை எடுத்து நன்கு கலந்துகொண்டு, அதைவைத்து பல் தேய்த்தால் பற்கள் பளிச்சிடும். வாய் துர்நாற்றம் போய்விடும். பல் தேய்ப்பதைப் போல் பிரஷ் கொண்டு தேய்ப்பதைவிட, பற்களில் இந்த பேஸ்ட்டைத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பின் கழுவ வேண்டும்.

சுகர் ஸ்கிரப்

ஒயிட் சுகர், பிரௌன் சுகர் இரண்டையும் சமஅளவு எடுத்துக் கொண்டு, அதோடு ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். பின் முகத்தில் வட்டவடிவில் நன்கு மசாஜ் செய்து 10 நிமிடம் வரையிலும் வைத்திருந்து, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!