உணவகத்தில் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய நபருக்கு பெண் அளித்த அதிர்ச்சி!

உணவகத்தில் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்ரிக்காவின் ஜொகானஸ்பர்க்கில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சமீபத்தில் ஒரு நபர் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

மெக்டொனால்டு உணவகத்தில் வைத்து அந்த நபர் தனது காதலியிடம் தனது விருப்பத்தை தெரிவித்த பிறகு அந்த பெண் கூறிய பதில் அங்குள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கும் அந்த வீடியோவில், “உணவகத்தின் கவுண்டருக்குப் பின்னால் உள்ள மெக்டொனால்டு காசாளரிடம் அந்த பெண் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக கையில் மோதிரத்துடன் அவருக்கு பின்னால் நிற்கும் நபர் அந்த பெண்ணை அழைக்கிறார். அந்த பெண்ணிடம் அந்த நபர் தன் காதலை வெளிப்படுத்த, இதைக்கண்ட அங்கு இருந்த வாடிக்கையாளர்கள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அந்த பெண் சம்மதம் தெரிவிப்பார் என்ற எண்ணத்திலும் கரகோஷம் எழுப்புகின்றனர்.

ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து சில நிமிடம் அவரிடம் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து அந்த பெண் வெளியேறுகிறார். காதலை வெளிப்படுத்திய அந்த நபருடன் இதனை கண்ட அங்கிருந்த வாடிக்கையாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதை அங்கு இருந்த பலர் வீடியோ எடுக்க அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!