பால் குளியல் செய்வது எப்படி? இதனால் என்ன நன்மைகள்..?

பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் உள் மற்றும் வெளிப்புற சரும அடுக்கை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வயதாகும் தோற்றத்தையும் தள்ளிப்போட வழிவகுக்கும்.


பால் குளியலுக்கு பாலை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. குளிக்கும் நீரில் ஒன்றரை முதல் இரண்டு கப் பாலை கலந்தால் போதுமானது. பசும்பாலை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். பாலுடன் ரோஜா இதழ்கள், ஓட்ஸ், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து கொள்ளலாம். பால் குளியல் மூலம் குழந்தைகளை குளிப்பாட்டுவது சிறந்தது.

மன அழுத்தம்: வெதுவெதுப்பான நீரில் பால் சேர்த்தும் குளியல் போடலாம். இது தசைகளை மட்டுமின்றி மனதையும் தளர்வடைய செய்ய உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். பால் குளியலுக்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது தலைவலி பிரச்சினையை போக்கவும் உதவும்.

மென்மையான முடி: பால் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படக் கூடியது. தலையில் சிறிது பாலை தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு தலை முடியை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பாலில் இருக்கும் புரதங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

வயதான தோற்றம்: விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்வதை எதிர்க்கும் பண்புகள் பாலில் இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் உள் மற்றும் வெளிப்புற சரும அடுக்கை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வயதாகும் தோற்றத்தையும் தள்ளிப்போட வழிவகுக்கும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் பால் குளியல் போடுவது கரும்புள்ளிகள் மற்றும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேம்படுத்த உதவும் என்ற கருத்து நிலவுகிறது.


சருமம் உரிதல்: பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. உடலில் இருந்து இறந்த செல்களை நீக்குவதற்கு பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோரை அதிகம் பயன்படுத்தலாம். அத்தகைய ஈரப்பதத் துடன் இறந்த செல்களை நீக்குவதால் சருமத்தில் பளபளப்பை தக்கவைத்துக்கொள்ளலாம்.

பாலை பருகுவதோடு சரும அழகை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பாலில் உள்ள கொழுப்புகள் சருமத்தில் படர்ந்திருக்கும் எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு உதவும்.

அதில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு துணைபுரியும். பால் குளியல் உடலையும், மனதையும் தளர்வாக்கும். சருமத்தை புத்துணர்ச்சி அடையச்செய்யும். பல்வேறு உளவியல் நன்மைகளையும் வழங்கும்.

அழற்சி: பால் குளியலானது சரும வறட்சி, தோல் தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று நம்பப் படுகிறது. இருப்பினும் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்படவில்லை. ஆகையால் ஏதேனும் தோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் சரும மருத்துவரை அணுகுவது நல்லது.

வெயிலுக்கு இதமளிக்கும்: பால் குளியல் சருமத்திற்கு ஊட்டமளிக்கக்கூடியது. சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும பாதிப்புகளை சரி செய்ய உதவும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பால் குளியல் போடுவது கரும்புள்ளிகள் மற்றும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேம்படுத்த உதவும் என்ற கருத்து நிலவுகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!