ரஷிய அதிபர் புதின் பதவி விலகுகிறாரா..? – காரணம் என்ன?

ரஷிய அதிபர் புதின் பதவி விலக உள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகின்றன.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும், இதனால் ஆட்சி அதிகாரம் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவ்விடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றன.

முன்னதாக புதினுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவித்திருந்தது.

இதனிடையே புதினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், குறுகிய காலத்திற்கு அவரின் ஆட்சி செயலிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீப காலங்களில் புதினின் “நோய்வாய்ந்த தோற்றம் மற்றும் பொது இடங்களில் அசாதாரணமான பதற்றமான நடத்தை” பற்றி குறிப்பிடுகையில், ரஷிய அதிபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பார்கின்சன் நோய் உட்பட பல கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவியதாக அந்த அறிக்கை கூறியது.

மேலும் பட்ருஷேவ் தனது ஒரே நம்பகமான கூட்டாளியாகவும் அரசாங்கத்தில் நண்பராகவும் இருப்பதாக புதின் கருதுகிறார் என்பதை நாங்கள் அறிவோம். கூடுதலாக, அவரது உடல்நிலை மோசமடைந்தால், நாட்டின் உண்மையான கட்டுப்பாடு தற்காலிகமாக பட்ருஷேவின் கைகளுக்குச் செல்லும் என்று அதிபர் உறுதியளித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டெலிகிராம் சேனலின் உரிமையாளர், “பட்ருஷேவ் ஒரு அப்பட்டமான வில்லன். அவர் விளாடிமிர் புதினை விட சிறந்தவர் அல்ல. மேலும், அவர் மிகவும் தந்திரமானவர். விளாடிமிர் புதினை விட நயவஞ்சகமானவர் என்று நான் கூறுவேன். அவர் ஆட்சிக்கு வந்தால், ரஷியர்களின் பிரச்சனைகள் பெருகும்” என்று அவர் தெரிவித்தார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!