தொழிலாளியின் தலையில் இரும்பு கம்பியால் அடித்த மகன் அதிரடி கைது!

வீட்டுமனை தகராறு காரணமாக தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராஜுலு (வயது 85). கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரது மகன் ரகுராமன் (54) என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வீட்டுமனையை பிரிப்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தந்தை, மகனுக்கு இடையே இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரகுராமன் தனது தந்தையை தகாத வார்த்தைகளால் பேசி கையால் தாக்கினார்.

அப்போது வீட்டில் ஒரு மூலையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை வரதராஜூலு தலையில் பலமாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே சரிந்தார். பின்னர் ரகுராமன் வீட்டில் இருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக வரதராஜுலுவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நேற்று ரகுராமனை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!